தேரா சச்சா செளதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு சிறையில் சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என ஹரியானா மாநில சிறைத்துறை டிஐஜி கே.பி. சிங் தெரிவித்துள்ளார்.
வடமாநிலங்களிலும், பல்வேறு நாடுகளிலும் கோடிக்கணக்கான சீடர்களை கொண்டவர் குர்மீத் ராம் ரஹிம். பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பை சேர்ந்த குர்மீத்
ராம் ரஹிம் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், குர்மீத் ராம் ரஹீம் சோனாரியா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், ஹரியானா சிறை விதிகளின்படி நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குர்மீத்துக்கு உதவியாளர்
வழங்கப்பட்டிருப்பதாகவும், குளிரூட்டப்பட்ட அறை வழங்கபப்ட்டிருப்பதாகவும் ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தவறான தகவல்களை பரப்பவேண்டாம் என அவர்
ஊடகங்களையும் கேட்டுக்கொண்டார்.