5 நாட்களில் 9 லட்சம் பயனர்கள் - 'கூ' செயலியின் தற்போதைய நிலவரம்

5 நாட்களில் 9 லட்சம் பயனர்கள் - 'கூ' செயலியின் தற்போதைய நிலவரம்
5 நாட்களில் 9 லட்சம் பயனர்கள் - 'கூ' செயலியின் தற்போதைய நிலவரம்
Published on

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராடி வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் வெளிநாட்டை சேர்ந்த பிரபலங்கள் சிலர் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தனர். அது உலகம் முழுவதும் பரவலாக கவனத்தை ஈர்த்திருந்தது. அதோடு இந்திய அரசும் சில ட்விட்டர் கணக்குகளை முடக்குமாறு ட்விட்டர் இந்தியாவிடம் கேட்டுள்ளது. அதற்கு ஏற்றபடி ட்விட்டரும் முதலில் சில கணக்குகளை முடக்கியது. இருப்பினும் அடுத்த சில மணிகளில் அதை திரும்பப்பெற்றது. ட்விட்டரின் ட்விட்டரின் இந்த செயல் மத்திய அரசை அதிருப்தியடைய வைத்தது. அதனால் தங்களுக்கு வளைந்து கொடுக்காத ட்விட்டரை 69A சட்டப்பிரிவின் கீழ் இந்திய அரசு தடை செய்ய வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில் முழுவதும் இந்தியாவின் பெங்களூருவில் வடிவமைக்கப்பட்டுள்ள மைக்ரோ பிளாகிங் மற்றும் சமூக வலைத்தளமான  கூ (KOO) அப்ளிகேஷன் மத்திய அரசு அதிகாரிகளால் கவனம் பெற்றது. கடந்த 2020இல் இந்த அப்ளிகேஷன் அறிமுகமானது. இந்நிலையில் இந்தியாவில் ட்விட்டருக்கு எதிராக நிலவும் சர்ச்சையால் பிப்ரவரி 6 முதல் 11 வரையிலான 5 நாட்களில் மட்டுமே 9 லட்சம் பயனர்களை பெற்றுள்ளது கூ. 

KOO அப்ளிகேஷன் மூலமாக ஆங்கிலம் மற்றும் தமிழ் உட்பட 7 இந்திய மொழிகளில் ட்வீட்களை போலவே போஸ்ட் செய்யலாம் என தெரிகிறது. இருப்பினும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தும் பயனர்களின் பிரைவசி விவகாரத்தில் கேள்வி எழுந்துள்ளது. சீனாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் Shunwei Capital இந்த KOO அப்ளிகேஷனில் முதலீடு செய்துள்ளது தான் அதற்கான காரணம் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com