கொல்கத்தா மருத்துவர் கொலை: வெடித்த வன்முறை.. தடயத்தை அழித்ததா மர்ம கும்பல்? ஆலியா பட் போட்ட பதிவு!

பாதிக்கப்பட்ட பெண் பயிற்சி டாக்டருக்கு நீதி கேட்டு கொல்கத்தாவில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற போராட்டத்தில் மர்ம கும்பல் ஒன்று அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.
கொல்கத்தா, அலியா பட்
கொல்கத்தா, அலியா பட்எக்ஸ் தளம்
Published on

வடக்கு கொல்கத்தாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் சில தினங்களுக்கு முன்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்த நிலையில், இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு நியாயம் கேட்டு மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, இந்தக் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த தகவல்களை வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதாகவும் இக்கொலை சம்பவத்தில் மருத்துவமனைக்கு உள்ளேயும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் எனவும் மாணவியின் பெற்றோர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் பயிற்சி டாக்டருக்கு நீதி கேட்டு கொல்கத்தாவில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற போராட்டத்தில் மர்ம கும்பல் ஒன்று அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. போராட்டம் வன்முறையாக மாறியதால் போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் அவர்களை கலைத்தனர். இந்தச் சூழலில் பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட கருத்தரங்கு அறையை மர்ம கும்பல் நாசப்படுத்தியதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், போலீஸார் இதை மறுத்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: இமானே கெலிஃப் பாலினம் குறித்த கருத்து| எலான் மஸ்க், ட்ரம்ப் பெயர்கள் வழக்கில் சேர்ப்பு!

கொல்கத்தா, அலியா பட்
கொல்கத்தா மருத்துவர் கொலை: பிரேதப் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்.. மனு தாக்கல் செய்த பெற்றோர்

இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, ”திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அனுப்பிய குண்டர்கள்தான் மருத்துவமனைக்குள் புகுந்து ஆதாராங்களை அழித்துள்ளனர்” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

வன்முறைச் சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ், “இந்த விஷயத்தில், நான் உங்களுடன் (மாணவர்களுடன்) இருக்கிறேன். நாம், அதை எதிர்த்துப் போராடுவோம். இந்த மோசமான விஷயங்களை அனுமதிக்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:“6 மணிக்கு மேல் வேலை பார்க்க மாட்டேன்” - என்ற ஸ்டார்பக்ஸ் CEO பணி நீக்கம்... காரணம் என்ன?

கொல்கத்தா, அலியா பட்
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு: பொதுநல மனு தாக்கல்

இந்த நிலையில், மருத்துவ மாணவி கொலை தொடர்பாக நடிகை ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மீண்டும் ஒரு கொடூரமான பாலியல் வன்கொடுமை. பெண்கள் எங்கும் எப்போதும் பாதுகாப்பானவர்கள் இல்லை என்றே புரியவேண்டியுள்ளது. நிர்பயா பெருந்துயருக்குப் பிறகும் எதுவும் பெரிதாக மாறவில்லை” என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், 2022 தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரங்களை வெளியிட்டு, “மருத்துவத்துறையில் இப்படியான வன்கொடுமைகள் நடப்பது மிகவும் அச்சுறுத்தலானது. பெண்களின் சொந்த பாதுகாப்பு ஒரு சுமையாக மாறியுள்ளதை இந்தக் கொடூரமான நிகழ்வு மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்களே... பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்.

எல்லா இடங்களிலும் பாதுகாப்பை உயர்த்துங்கள், ஏன் இப்படி நடைபெறுகிறதென ஆராயுங்கள். தற்போதைய சூழலில் ஏதோ ஒரு மிகப்பெரிய தவறு இருக்கிறதென நினைக்கிறேன். மூலகாரணத்தைக் கண்டறிந்து வேரோடு நீக்கும்வரை எதுவும் மாறப்போவதில்லை.. பெண்களிடம் அவர்களின் பாதையையும் இடத்தையும் மாற்றுமாறு கூறாதீர்கள். அனைத்துப் பெண்களுக்கும் இன்னும் சிறந்தவை கிடைக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் இந்தப் பதிவுக்கு பலரும் ஆதரவை கமெண்ட் வழியாக தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: ’எனக்கும் ஒரு மகள் இருக்கிறார்’| மருத்துவர் கொலைக்கு எதிரான போராட்டத்தில் குதித்த ஆளும்கட்சி எம்பி!

கொல்கத்தா, அலியா பட்
கொல்கத்தா மருத்துவர் வன்கொடுமை|சூறையாடப்பட்ட மருத்துவமனை; அடித்து வெளியேற்றிய காவல்துறை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com