சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்திய கொல்கத்தா போலீஸ் - மேற்குவங்கத்தில் தொடரும் யுத்தம்

சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்திய கொல்கத்தா போலீஸ் - மேற்குவங்கத்தில் தொடரும் யுத்தம்
சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்திய கொல்கத்தா போலீஸ் - மேற்குவங்கத்தில் தொடரும் யுத்தம்
Published on

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் காவல் ஆணையரை விசாரிக்கச் சென்ற சிபிஐ அதிகாரிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். 

மேற்குவங்க அரசு 2013 ஆண்டு சாரதா சிட் நிதி மோசடியை விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. இந்தக் குழுவிற்கு ராஜீவ் குமார் தலைமை வகித்தார். இந்தச் சிறப்பு விசாரணை குழு சாரதா மற்றும் ரோஸ் வேலி சிட் நிதி மோசடியை விசாரிக்க அமைக்கப்பட்டது.

இக்குழுவிற்கு தலைமை வகித்த ராஜீவ் குமார், இந்த மோசடியை விசாரணையை மிகவும் தாமதப்படுத்தியதாகவும் இந்த மோசடியை நீர்த்துபோகச் செய்யும் விதமாக செயல்பட்டதற்காகவும் கூறி மத்திய புலனாய்வு அமைப்பு இவருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் ராஜீவ் குமார் மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதனால் ராஜீவ் குமார்  மத்திய புலனாய்வு அமைப்பின் ‘உடனடி கைது’ நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று தகவல்கள் தெரியவந்தன. அத்துடன், கொல்கத்தாவில் நடந்த தேர்தல் ஆணையத்தின் கூட்டத்திலும் ராஜீவ் குமார் கலந்து கொள்ளவில்லை. இதனால் சிட் நிதி மோசடியை நீர்த்துப்போகச் செய்த கொல்கத்தா காவல்துறை கமிஷ்னர் ராஜீவ் தற்போது தலைமறைவாக உள்ளார் என சிபிஐ தெரிவித்தது.

சாரதா ஊழல் முறைகேடுகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை தப்பிக்கவிட்ட புகாரில், கொல்கத்தா காவல் ஆணையரை கைது செய்ய சிபிஐ முயற்சி மேற்கொண்டனர். இதற்காக, தெற்கு கொல்கத்தாவில் உள்ள காவல் ஆணையரின் வீட்டிற்கு அவரை தேடி சிபிஐ அதிகாரிகள் தேடிச் சென்றனர். ஆனால், சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்தி, காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவல்துறையினர். 

மாநில அரசின் அனுமதியின்றி ஆணையரை கைது செய்ய அனுமதிக்க முடியாது என முதல்வர் மம்தா ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். மம்தா உத்தரவையடுத்து, காவல்துறையினரும் சிபிஐ அதிகாரிகளை தடுத்து திருப்பியனுப்பியதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டிற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி சென்றுள்ளார். அங்கு, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அவர் ஆலோசனை செய்து வருகிறார். மேற்குவங்க டிஜிபி, கொல்கத்தா மேயர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com