கொல்கத்தா மாடல் கொலை வழக்கில் கேப் டிரைவர் கைது

கொல்கத்தா மாடல் கொலை வழக்கில் கேப் டிரைவர் கைது
கொல்கத்தா மாடல் கொலை வழக்கில் கேப் டிரைவர் கைது
Published on

கொல்கத்தா மாடல் கொலை வழக்கில் கேப் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை 31-ஆம் தேதி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகே பெண் ஒருவர் சடலமாக கிடந்தார். அவரது உடலில் பல்வேறு கத்திக்குத்தும், தலையில் பலத்த காயம் இருந்தது. போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட நிலையில் இறந்து கிடந்தது யார் எனத் தெரியவரவில்லை.

இதனையடுத்து போலீசார் டெல்லி, கொல்கத்தா எனப் பல்வேறு இடங்களில் மாயமான பெண்களின் விவரங்களை சேகரித்து அதன்படி விசாரணையை தொடங்கினார். அதில் கொல்லப்பட்டவர் கொல்கத்தாவை சேர்ந்த மாடல் அழகி பூஜா சிங் தே என்பது தெரியவந்தது.

இந்நிலையில் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக ஓலா டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். சவாரியின் போது பூஜாவிடம் டிரைவர் அதிக பணம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் அதிக பணம் கொடுக்க பூஜா மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து அவரைக் கடுமையாக தாக்கிய டிரைவர் அவரது கைப்பையை எடுத்துச் சென்றுள்ளார். 

ஆனல் அதில் வெறும் 500 ரூபாய் பணம் மட்டும் இரண்டு மொபைல் போன்கள் மட்டுமே இருந்துள்ளன. இந்நிலையில் கொலை சம்பவம் தொடர்பாக கேப் டிரைவர் நாகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் யார் என்பதை கண்டறியவே சிறிது காலம் ஆகிய நிலையில், கொல்கத்தாவை சேர்ந்த மாடல் அழகிதான் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்ததும், அதன்பின் எளிமையாக குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com