’எனக்கும் ஒரு மகள் இருக்கிறார்’| மருத்துவர் கொலைக்கு எதிரான போராட்டத்தில் குதித்த ஆளும்கட்சி எம்பி!

திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான சுகேந்து சேகர் ரே, மாணவர்களுடனான போராட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.
சுகேந்து சேகர் ரே
சுகேந்து சேகர் ரேஎக்ஸ் தளம்
Published on

வடக்கு கொல்கத்தாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயதான பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்த நிலையில், இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு நியாயம் கேட்டு மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, இந்தக் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, மத்திய புலனாய்வு அமைப்பு இன்று விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான சுகேந்து சேகர் ரே, மாணவர்களுடனான போராட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில், ”நாளை (இன்று) போராட்டத்தில் இணைய இருக்கிறேன். குறிப்பாக, மில்லியன் கணக்கான பெங்காலி குடும்பங்களைப்போல எனக்கு ஒரு மகள் மற்றும் சிறுவயது பேத்திகள் இருக்கின்றனர். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் போதும். இதை, ஒன்றாக எதிர்க்க வேண்டும்” என நேற்று இரவு தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: ஒலிம்பிக்கில் தோல்வி| பேட்மிண்டன் வீரரை விமர்சித்த பயிற்சியாளர்.. ஆதரவு தெரிவித்த சுனில் கவாஸ்கர்!

சுகேந்து சேகர் ரே
மருத்துவர் கொலை வழக்கு: கொல்கத்தா விரையும் சிபிஐ... விடாமல் தொடரும் மாணவர்கள் போராட்டம்

இந்தப் பதிவு வைரலான நிலையில், பயனர் ஒருவர், “மூத்த தலைவர் திரிணாமுல் காங்கிரஸிலிருந்து தனது சொந்த அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக தூக்கி எறியப்படலாம்” என கருத்து தெரிவித்திருந்தார். அதற்கும் பதிலளித்த எம்பி சுகேந்து, "தயவுசெய்து என் தலைவிதியைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் ரத்தம் என் நரம்புகளில் ஓடுகிறது. அதற்காக நான் கவலைப்படமாட்டேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

75 வயதான சுகேந்து, 2011ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினராகவும், திரிணாமுல் காங்கிரஸின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

முன்னதாக, கொல்கத்தா மற்றும் வங்காளத்தின் பிற பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதற்கு எதிராக, ’சுதந்திரம் பெற்ற நள்ளிரவில் பெண்களின் சுதந்திரத்திற்காக’ என்ற பெயரில் நேற்று நள்ளிரவு முதல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர், சில மணி நேரத்திற்குப் பிறகு, போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக முக்கிய மருத்துவர்கள் அமைப்பு நேற்று இரவு அறிவித்தது. இருப்பினும் டெல்லியில் உள்ள முதன்மையான அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) ரெசிடென்ட் டாக்டர்கள் சங்கம் உட்பட பல அமைப்புகள் வேலைநிறுத்தம் தொடரும் என்று தெரிவித்துள்ளன.

இதையும் படிக்க: மனுபாக்கர் - நீரஜ் சோப்ரா திருமணம் குறித்த செய்தி| முற்றுப்புள்ளி வைத்த மனுபாக்கரின் தந்தை!

சுகேந்து சேகர் ரே
கொல்கத்தா | பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண் பயிற்சி மருத்துவர் கொலை! வெடித்தது போராட்டம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com