கொல்கத்தா மருத்துவர் கொலை: பிரேதப் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்.. மனு தாக்கல் செய்த பெற்றோர்

பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில், கொலை செய்யப்பட்ட மாணவியின் பெற்றோர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
சஞ்சய் ராய்
சஞ்சய் ராய்எக்ஸ் தளம்
Published on

வடக்கு கொல்கத்தாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் சில தினங்களுக்கு முன்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்த நிலையில், இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

கைதான சஞ்சய் ராய்
கைதான சஞ்சய் ராய்

இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு நியாயம் கேட்டு மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, இந்தக் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, மத்திய புலனாய்வு அமைப்பு இன்று விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில், கொலை செய்யப்பட்ட மாணவியின் பெற்றோர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், “பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பல விவரங்கள் தெரிய வந்துள்ளன. என் மகளின் உடலில் பல காயங்கள் இருந்துள்ளன. இது ஒரு மிருகத்தனமான வன்முறை தாக்குதலைக் காட்டுகிறது. குறிப்பாக, அந்த அறிக்கையில் என் மகளின் உடலிலிருந்து 150 மில்லிகிராம் விந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள், என் மகளைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்திருக்கலாம் என உறுதியாகிறது. இச்செயலை, ஒருவர் மட்டுமே செய்திருக்க முடியாது என்பது உறுதியாகிறது. அதற்கான ஆதாரங்கள் பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவதுள்ளது. ஆனால் இந்த வழக்கில், ஒருவரைத் தவிர மேற்கொண்டு எந்த நபர்களும் கைது செய்யப்படவில்லை.

மட்டுமன்றி எங்கள் மகளின் மரணத்தில் தொடர்புடைய மற்றவர்களைக் காப்பாற்றும் நோக்கில் முறையற்ற பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என நாங்கள் கருதுகிறோம்” என அதில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: மனுபாக்கர் - நீரஜ் சோப்ரா திருமணம் குறித்த செய்தி| முற்றுப்புள்ளி வைத்த மனுபாக்கரின் தந்தை!

சஞ்சய் ராய்
’எனக்கும் ஒரு மகள் இருக்கிறார்’| மருத்துவர் கொலைக்கு எதிரான போராட்டத்தில் குதித்த ஆளும்கட்சி எம்பி!

ஆனால், இதை மாநில போலீஸார் மறுத்துள்ளனர். “பிரேதப் பரிசோதனை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் நடைபெற்றது. இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. இதை உறுதி செய்யும் பொருட்டு வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையே பெண்ணின் குடும்பத்தினரிடமும் பகிர்ந்து கொள்ளப்பட்டது” என போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் காவல் துறையில் உடனடியாகப் புகார் அளிக்காதது ஏன்? மருத்துவக் கல்லூரியின் தலைவர் பதவியிலிருந்து டாக்டர் கோஷ் ராஜினாமா செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு மற்றொரு மருத்துவக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டது ஏன்? எனப் பல கேள்விகளும் எழுந்துள்ளன.

இதையும் படிக்க: வினேஷ் போகத் வழக்கு| மூன்றாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது ஏன்? விளக்கம் தந்த வழக்கறிஞர்!

சஞ்சய் ராய்
மருத்துவர் கொலை வழக்கு: கொல்கத்தா விரையும் சிபிஐ... விடாமல் தொடரும் மாணவர்கள் போராட்டம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com