கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை: நாடு முழுவதும் வெடித்த போராட்டம்... ப்ளூடூத்-ஆல் சிக்கிய கொலையாளி!

கொல்கத்தாவில் கடந்த 9ம் தேதி மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை
கொல்கத்தா மருத்துவ மாணவி கொலைபுதிய தலைமுறை
Published on
  • என்னதான் நமது நாட்டில் பாலியல் வன்கொடுமைக்கான தடுப்பு சட்டங்கள் இருந்தாலும்...

  • கடந்த 2012ம் ஆண்டு நாட்டையே உலுக்கிய நிர்பயா கொலை வழக்கிற்கு பிறகு 2023ம் ஆண்டு சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளாப்பட்டு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும்...

- இன்னும் நாட்டில் பெண்கள் மீதான வன்முறைகளும் பாலியல் ரீதியான வன்கொடுமைகளும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன. அப்படி கொல்கத்தாவில் டியூட்டியில் இருந்த முதுநிலை பயிற்சி மருத்துவர் ஒருவர், மருத்துவமனை வளாகத்திலேயே மிகக் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே பெண்கள் பாதுகாப்பு மீதான நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

கூட்டு பாலியல் வன்கொடுமை
கூட்டு பாலியல் வன்கொடுமை

கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி கொல்கத்தாவில் அரசால் நடத்தப்படும் ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஒரு பெண் இறந்த நிலையில் சடலாமகக் கண்டெடுக்கப்பட்டார். இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்த அவர் 8ம் தேதி இரவுப் பணியில் இருந்துள்ளார். தனது வேலை நேரம் முடிந்து இரண்டு மணியளவில் தனது ஜூனியர் மாணவர்களுடன் சேர்ந்து உணவு அருந்தியுள்ளார்.

கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை
கொல்கத்தா | பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண் பயிற்சி மருத்துவர் கொலை! வெடித்தது போராட்டம்!

பின்னர் மருத்துவமனையில் மாணவர்களுக்கென தனி ஓய்வுஅறை இல்லாததால் மருத்துவமனையின் நான்காவது மாடியில் உள்ள செமினார் ஹாலுக்கு ஓய்வெடுக்கச் சென்றுள்ளார்.

காலை வெகுநேரமாகியும் அவர் திரும்பி வராததால் மற்ற மாணவர்கள் அவரைத் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளனர். எவ்வளவு முயன்றும் அவரைத் தொடர்புகொள்ள முடியாமல் போகவே மாணவர் ஒருவர் அவரைத் தேடி செமினார் ஹாலுக்குச் சென்றுள்ளனர்.

அங்கு அவர் கண்ட காட்சி நெஞ்சைப் பதர வைத்துள்ளது. காரணம், அப்பெண் பயிற்சி மருத்துவர் செமினார் ஹாலில் ரத்த வெள்ளத்தில் அரை நிர்வாணமாக இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடையந்த மாணவர் உடனடியாக நிர்வாகத்தினர் மற்றும் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, “இம்மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு இல்லை. இனி இரவுப் பணிக்கு வரமாட்டோம்” என மருத்துவம் பயின்று வரும் பிற மருத்துவர்கள், மெழுகுவர்த்தி ஏந்தி மருத்துவமனைக்கு ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினர். எமர்ஜென்சி பிரிவைத் தவிர மற்ற பிரிவு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு: பொதுநல மனு தாக்கல்

இந்நிலையில் முதற்கட்ட பிரேதப் பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. உடற்கூராய்வில் மருத்துவ மாணவியின் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அந்தரங்க உறுப்புகள், முகம், உதடுகள், கழுத்து, வயிறு, விரல்கள் மற்றும் கணுக்கால் ஆகிய இடங்களில் காயங்கள் இருந்ததும், அவர் மூச்சை நிறுத்திக் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

கொலையாளி
கொலையாளிகோப்பு படம்

இது தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்தில் கிடைத்த ப்ளூடூத் ஹெட்போனை வைத்து இந்த வழக்குத் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இவர் மருத்துவமனையில் வேலை செய்தவர் இல்லை என்பதும், தன்னார்வலப் பணிக்காக அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சஞ்சய் ராய் 4 மணி அளவில் செமினார் ஹாலுக்குள் நுழைவதும் சுமார் 40 நிமிடங்கள் கழித்து செமினார் ஹாலை விட்டு வெளியே வருவதும் பதிவாகி இருந்துள்ளது. அதுமட்டுமல்லாது அவர் செமினார் ஹாலுக்குள் நுழையும்போது அவர் காதில் ஒரு ப்ளூடூத் ஹெட்போனை அணிந்துள்ளார்.

கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை
சிவகங்கை: பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்த போது திடீரென வெடித்த ப்ளூடூத் ஹெட்செட்! என்ன நடந்தது?

ஆனால் அவர் வெளியே வரும்போது அவரிடம் ப்ளூடூத் ஹெட்போன் இல்லாததை போலீசார் அதில் பதிவாகியிருந்துள்ளது. சம்பவ இடத்தில் கிடைத்த ஹெட்போனும் சஞ்சய் ராய் அணிந்திருந்த ஹெட்போனும் ஒன்றாக இருப்பதை கவனித்த போலீசார் அதை முக்கிய ஆதாரமாக வைத்து அவரைக் கைது செய்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்துவிட்டு தனது அறைக்குத் திரும்பிய சஞ்சய் ராய் கொஞ்சம் கூட மன உறுத்தலே இல்லாமல் நிம்மதியாக வெகு நேரம் உறங்கியுள்ளார். பின்னர் காலையில் எழுந்து தனது ஆடையில் இருந்த கொலை செய்யப்பட்ட பெண்ணின் ரத்த கறைகளைப் போக்க நன்கு துவைத்துப் போட்டுவிட்டு தனது அன்றாடத்தை கவனிக்கச் சென்றுள்ளார். ஆடைகளில் இருந்த ரத்தக்கறையை அழித்த அவர் தனது ஷூவைக் கவனிக்காமல் விட்டுள்ளார். இதனால் அவரது ஷூவில் இருந்த ரத்தக்கறையையும் போலீசார் கண்டுபிடுத்து சாட்சியங்களில் சேர்த்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கு தற்போது சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், “தேவைப்பட்டால் குற்றவாளிகளை தூக்கில் போடுவேன்” என அம்மாநில முதலமைச்சர் மம்தா உறுதி அளித்துள்ளார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜிட்விட்டர்

மேலும், “பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேசினேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களுக்கு உறுதியளித்துள்ளேன். இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நான் மரண தண்டனைக்கு ஆதரவானவர் அல்ல. இருப்பினும் தேவைப்பட்டால் குற்றவாளி தூக்கிலிடப்படுவார். அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்றார்.

கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை
IPL Coach| வெளியேறும் கவுதம் கம்பீர்.. உள்நுழையும் ராகுல் டிராவிட்.. தீவிரம் காட்டும் கொல்கத்தா அணி!

இதற்கிடையில், கொல்கத்தா காவல்துறை ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் ஒரு பெரிய குழுவை நியமித்தது. “சரியான அடையாளம் இல்லாமல் மருத்துவமனை வளாகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மருத்துவ நிறுவனத்தில் உள்ள சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்வோம்” என்று உறுதியளித்துள்ளது. ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருந்துவர்களின் ஆதங்கம் குறையவில்லை.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் சந்தீப் கோஷ் ராஜினாமா செய்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்று போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இரவுப் பணியில் இருந்த மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மருத்துவமனை வளாகத்திலேயே கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com