கொல்கத்தா துர்கா பூஜையில் பிளாஸ்டிக் விழிப்புணர்ச்சி  

கொல்கத்தா துர்கா பூஜையில் பிளாஸ்டிக் விழிப்புணர்ச்சி  
கொல்கத்தா துர்கா பூஜையில் பிளாஸ்டிக் விழிப்புணர்ச்சி  
Published on

கொல்கத்தா துர்கா பூஜைக்காக போடப்பட்ட பந்தலில் சுற்றுச்சூழல் மாசு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சி பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. 

மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் சிறப்பு பந்தல் அமைக்கப்படும். அந்தவகையில் கொல்கத்தாவில் ஒரு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதில் சுற்றுச்சூழல் மாசு தொடர்பான விழிப்புணர்வு காட்சி பொருட்கள் இடம்பெற்றுள்ளன. 

இந்தக் கண்காட்சியில் பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் பாட்டீல்கள், கொசுவர்த்தி, பட்டாசு உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்ற்கு ஏற்பாடு செய்த கௌஷ்தவ் தாஸ்,“இதனை வடிவமாக்க எங்களுக்கு 6 மாதங்கள் ஆனது. நாங்கள் சுற்றுச்சூழல் எவ்வாறு மாசுப் பட்டிருக்கிறது என்பது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவே இந்த முயற்சியை எடுத்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com