பிரதமர் மோடியின் சாதனைகளை பட்டியலிட்டு மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சரான கேஜே அல்போன்ஸ் பாதிரியார்களுக்கு கடிதம் எழுதியுள்ளர்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பாஜகவை வீழ்த்த இப்போதே எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. கூட்டணி பேச்சுகளும் அடிபடுகின்றன. நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலிலும் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்து. இதனால் நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்து அக்கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் சாதனைகளை பட்டியலிட்டு மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சரான கேஜே அல்போன்ஸ் நாடு முழுவதும் உள்ள 300 பாதிரியார்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் கிறிஸ்துமஸ் வாழ்த்துளை தெரிவித்துள்ள அமைச்சர் பிரதமர் மோடியின் 10 சாதனைகளையும் குறப்பிட்டுள்ளார். 95 மில்லியன் கழிவறைகள், 58 மில்லியன் எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகம், ஏழை மக்களுக்கு 300 மில்லியன் வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டது, 26.3 மில்லியன் வீடுகள் ஏழை மக்களுக்கு கட்டித் தரப்பட்டது, ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ காப்பீடு உள்ளிட்வற்றை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சிறுபான்மை மக்களின் அச்சத்தை போக்கி நம்பிக்கை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஏதாவது தேவாலயத்தில் பிரச்னை என்றால், உடனடியாக பேசி பிரச்னைக்கு தீர்வு எட்ட அதிகாரிகளை வைத்து நடடிவக்கை எடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே நாடாளுமன்றத் தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை அள்ளவே மத்திய அமைச்சர் இந்த கடிதத்தை எழுதியுள்ளதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றன.