கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக போபையா நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
போபையா நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்றிரவு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், போபையாவின் நியமனத்தை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையில் நடக்கும் வாக்கெடுப்பை நேரலை செய்யவேண்டும் என்றும் இதன் மூலம் வெளிப்படைத்தன்மை இருக்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வாக்கெடுப்பைத்தவிர சட்டமன்றத்தில் வேறு அலுவல் நடைபெறக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.