விமானப்படை குறிவைத்த பயங்கரவாதிகள் படம் வெளியீடு

விமானப்படை குறிவைத்த பயங்கரவாதிகள் படம் வெளியீடு
விமானப்படை குறிவைத்த பயங்கரவாதிகள் படம் வெளியீடு
Published on

இந்திய விமானப்படை தாக்குதலின்போது குறிவைக்கப்பட்ட பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 40 இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்து 12 நாட்களுக்குப் பிறகு இன்று, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாடு அருகே பாகிஸ்தான் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், புல்வாமாவில் தாக்குதலை நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கட்டுப்பாட்டு அறைகள் தகர்த்தப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் ‘மிராஜ் 2000’ ரக போர் விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பாலகோட் பகுதியில் அதிகாலை தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதல் சுமார் 8 நிமிடம் நீடித்தது. இதேபோல் முஷாபரா பாத் பகுதியிலும் சுமார் 7 நிமிடம் தாக்குதல் நடத்தப்பட்டது. அத்துடன் சகோட்டி பகுதியில் அதிகாலை சுமார் 6 நிமிடம் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது. 21 நிமிடம் நடந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முகாதீன் தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டது. இதில் முக்கியமாக ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டு அறையும் தகர்க்கப்பட்டது.

இந்நிலையில் விமானப்படை தாக்குதலின்போது குறிவைக்கப்பட்ட பயங்கரவாதிகள் முஃப்தி அசார் கான் மற்றும் மசூத் அசாரின் அண்ணன் இப்ராஹிம் அசார் ஆகியோரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் முஃப்தி அசார் என்பவன் தான் புல்வாமா தாக்குதலுக்கு தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது. மற்றொருவனான இப்ராஹிம் அசார், இந்திய ஏர்லைன்ஸ் விமானம் 814-ஐ 1999ஆம் கடத்திய 3 பயங்கரவாதிகளில் ஒருவன். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com