கேரளா: திருவனந்தபுரத்தில் பட்டப்பகலில் கொரியர் கொடுப்பதுபோல் சென்ற பெண் ஒருவர், சுகாதாரத்துறை அதிகாரியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருவனந்தபுரத்தில் வசித்து வந்தவர் ஷினி. இவர் அப்பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். ஞாயிற்றுகிழமை காலை மழை பெய்த சமயத்தில், கோட் சூட்டுடன் வந்த ஒரு பெண் ஒருவர், ஷினிக்கு கூரியர் வந்ததாக கூறி ஷினியை அழைத்துள்ளார்.
அச்சமயம் ஷினியின் கணவரான சுஜீத் மற்றும் சுஜீத்தின் தந்தையான பாஸ்கரன் நாயர், கொரியரை தங்களிடம் தருமாறு அந்த பெண்ணைக் கேட்டுள்ளார். ஆனால் அப்பெண் கொரியர் ஷினியின் பெயரில் வந்துள்ளதால் அவர் கையொப்பமிட வேண்டும் என்று கூறவே, ஷினி வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்துள்ளார்.
கொரியர் பெண் கொடுத்த பேனாவை எடுத்து ஷினி கொரியர் புத்தகத்தில் கையெழுத்து போடும் சமயத்தில், அப்பெண் தனது கோட் பாக்கெட்டில் இருந்து ரிவால்வரை எடுத்து ஷினியை மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் முதல் இரண்டு குண்டு குறி தவறி போய் உள்ளது மூன்றாவது குண்டு ஷினியின் உள்ளங்கையை துளைத்துள்ளது.
சம்பவம் நடந்த சமயம் ஷினியின் அருகில் அவரது குடும்பத்தினர் அனைவரும் இருந்ததாக கூறப்படுகிறது. ஆகவே... சம்பவத்தைக் கண்டு அக்குடும்பத்தினர் அலறவே... கொரியர் பெண் அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
அதன் பின் சம்பவ இடத்திற்கு வந்த ஆயுத நிபுணர்கள் மற்றும் போலிசார், தடயங்களை சேகரித்தனர். மேலும் அழைப்பு மணியிலிருந்த கைரேகையும் சேகரிக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட பெண் முகத்தை மூடிக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அதனால் அவர் யார் என்ற அடையாளம் தனக்கு முழுவதுமாக தெரியவரவில்லை என்று ஷினி கூறியதாகச் சொல்லப்படுகிறது.
இதனை அடுத்து அங்கிருந்த கண்காணிப்பு கேமரவில் பதிவாகியுள்ள சம்பவத்தைக்கொண்டு போலிசார் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை தேடி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளின் படி அப்பெண் ஒரு காரில் வந்து இறங்குகிறாள். அதனால், இப்பெண்ணை தவிற வேறொருவரும் இக்குற்றத்தில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்று போலிசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அவர்கள் வந்த காரின் நம்பர் பளேட் தவறானது என்றும் சொல்லப்படுகிறது.
இது குறித்து போலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.