கேரளாவில் அருகாமையில் எங்கு கழிவறை இருக்கு என்பதனை தேடி அலைவதற்கு இனி அவ்வளவு சிரமம் இருக்காது.
பொதுவாக சுற்றுலா செல்வோருக்கும், புது இடங்களுக்கு செல்வோருக்கும் மிகவும் சிரமமான ஒன்று அருகாமையில் இருக்கும் கழிப்பறைகளை தேடி கண்டுபிடிப்பது. தற்போது அதனை சுலபமாக்கியுள்ளது கேரளா சுற்றுலாத் துறை. ஆம் இதற்காக பிரத்யேக மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அருகாமையில் இருக்கும் டாய்லெட்டை எளிதில் கண்டுபிடிக்கலாம்.
டாய்லெட் எங்கிருக்கிறது என்று மட்டுமில்லாமல், அது மேற்கத்திய பாணி கழிப்பறையா அல்லது இந்திய பாணி கழிப்பறையா என்பதையும் அறிந்துகொள்ள முடியும். கிட்டத்தட்ட 750 கழிவறைகள் எங்கு இருக்கின்றன என்பதை இந்த மொபைல் ஆப் மூலம் தெரிந்து கொள்ள முடியும். மொபைல் ஆப் மட்டுமில்லாமல் கேரளா சுற்றுலாத் துறையின் இணையதளத்திலும் இந்த தகவல்கள் இருக்கின்றன. இந்த சிறப்பு வசதி ஜூலையில் தொடங்கப்பட உள்ளன.
பொதுவாக அமெரிக்க, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல இடங்களில் மொபைல் ஆப் மூலம் அருகாமை கழிவறைகளை கண்டறியும் வசதி இருக்கிறது. தற்போது கேரளாவும் அதனை பின்பற்றியுள்ளது. சுற்றுலா செல்வோருக்கு இந்த மொபைல் ஆப் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.