‘பள்ளிக் கல்வி தரத்தில் சிறந்த மாநிலம் கேரளா’ - ஆய்வு

‘பள்ளிக் கல்வி தரத்தில் சிறந்த மாநிலம் கேரளா’ - ஆய்வு
‘பள்ளிக் கல்வி தரத்தில் சிறந்த மாநிலம் கேரளா’ - ஆய்வு
Published on

பள்ளிக்கல்வி தரத்தில் சிறந்த மாநிலமாக கேரளா திகழ்வதாக நிதி ஆயோக்கின் அறிக்கை தெரிவித்துள்ளது. 

நாட்டிலுள்ள பள்ளிக் கல்வியின் தரம் தொடர்பான ‘School Education Qualtiy Index 2019’ என்ற அறிக்கையை நிதி ஆயோக் இன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை 2016-17ஆம் கல்வியாண்டிற்கான தரவுகளை வைத்து கல்வி தரத்தை கணிக்கிட்டுள்ளது. அதன்படி நாட்டிலேயே கேரளாவில் பள்ளிக் கல்வியின் தரம் சிறந்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பள்ளிக் கல்வியின் தரம் 76.6 சதவிகிதமாக உள்ளது என்று இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 

இதில் குறைந்த பட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் கல்வி தரம் 36.4 சதவிகிதமாக உள்ளது. எனினும் இந்தக் கல்வி தரத்தில் ஹரியானா, அசாம் மற்றும் உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 2015-16ஆம் ஆண்டைவிட அதிகம் முன்னேற்றும் அடைந்துள்ளது. யூனியன் பிரதேசங்கள் பள்ளிக் கல்வியின் தரத்தில் சண்டிகர் முதலிடத்தை பிடித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com