கேரள மாநிலம் வயநாட்டின் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள சூரல்மாலா என்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மலைப்பகுதிக்கு அருகே உள்ள வீடுகள் மீது மண் சரிந்து விழுந்ததில், நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர். மேலும், பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளுக்காக அரக்கோணம் தேசிய பேரிடர் குழுவினர் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.
இதற்கிடையே, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் பெய்து வரும் மழையால், மீட்பு பணி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என இணை அமைச்சர் சுரேஷ்கோபி புதியதலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
தொடர் மழையால் நிலச்சரிவில் சிக்கி 20க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.