சபரிமலையில் தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு ரத்தா? தேவஸ்வம் போர்டு விளக்கம்

சபரிமலையில் தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு ரத்தா? தேவஸ்வம் போர்டு விளக்கம்
சபரிமலையில் தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு ரத்தா? தேவஸ்வம் போர்டு விளக்கம்
Published on

சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கான 'வெர்ச்சுவல் கியூ' 'ஆன்லைன்' முன்பதிவு ரத்து என சில தமிழ் ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், தவறான தகவல் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் இந்த ஆண்டு மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாளிலிருந்து தற்போது வரை சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் சபரிமலையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 'வெர்சுவல் க்யூ' மூலம் முன்பதிவு செய்து தரிசனத்திற்கு வருகின்றனர். இந்நிலையில் சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டதாக சில தமிழ் ஊடகங்களில் (புதிய தலைமுறையில் அல்ல) செய்தி வெளியானது.

இதனால் ஐயப்ப பக்தர்கள் குழப்பம் அடைந்தனர். ஆன்லைன் முன்பதிவு செய்வதில் தடுமாற்றம் அடைந்தனர். இதையடுத்து அந்த செய்திகள் தவறானது என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தினசரி 90 ஆயிரம் பக்தர்களுக்கு முன்பதிவு செய்யப்படும். அதற்கு மேல் முன்பதிவு செய்ய முயலும் பக்தர்களின் பதிவு ஏற்கப்படாது. இதனால் ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டதாக வதந்தியும் செய்தியும் பரவியது.

இதை யாரும் நம்ப வேண்டாம். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு வழக்கம் போல் இயங்கி வருவகிறது, ' என தேவஸ்வம் போர்டு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com