அன்பு; நெகிழ்ச்சி; மகிழ்ச்சி - முதியோர் இல்லத்தில் நடைபெற்ற திருமணம்!

அன்பு; நெகிழ்ச்சி; மகிழ்ச்சி - முதியோர் இல்லத்தில் நடைபெற்ற திருமணம்!
அன்பு; நெகிழ்ச்சி; மகிழ்ச்சி - முதியோர் இல்லத்தில் நடைபெற்ற திருமணம்!
Published on

கேரளாவின் அரசு முதியோர் இல்லத்தில் 60 வயதைக் கடந்த ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்தது.

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ராமவர்மபுரத்தில் அரசாங்கத்தால் நடத்தப்படும் முதியோர் இல்லத்தில் இருந்த கோச்சானியனும்(67), லட்சுமியம்மாளும்(66) திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்ற நிலையில் அவர்களது திருமணம் தற்போது நடந்து முடிந்துள்ளது.

கேட்டரிங் தொழில் வந்த லட்சுமியம்மாளின் கணவர் 21 வருடங்களுக்கு முன்பு காலமான நிலையில், அவரது உதவியாளரான கோச்சானியனிடம் தன் மனைவியை பார்த்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு பின் தனியாக வசித்து வந்த லட்சுமியம்மாளுக்கு அவ்வப்போது தேவையான உதவியை மட்டும் கோச்சானியன் செய்து வந்துள்ளார். பிறகு வீட்டை விற்ற லட்சுமியம்மாள் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அவ்வப்போது வந்து பார்த்துச்சென்ற கோச்சனியன் சில ஆண்டுகளாக லட்சுமியம்மாளை பார்க்கவில்லை.

அதன் பின் ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்ற லட்சுமியம்மாள் அங்கு கோச்சானியனை பார்த்துள்ளார். நீண்ட வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்டு அன்பை பரிமாறிக்கொண்ட இருவரும் மீதமுள்ள காலத்தில் கணவன்-மனைவியாக வாழ முடிவு செய்தனர். அதன்படி அவர்களது திருமணம் தற்போது நடந்து முடிந்துள்ளது. முதியோர் இல்லத்தின் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திருமண ஏற்பாடுகளை செய்து முடிக்க, பலர் அளித்த நிதியுதவியின்படி இந்த திருமணம் நடந்துள்ளது. கோச்சானியன் - லட்சுமியம்மாள் திருமணத்தில் முக்கியமான அதிகாரிகள், துறை அமைச்சர்கள், எம்பிக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com