கேரளா: முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட மின்சாரம் - மாவு மில் உரிமையாளரின் வினோத போராட்டம்

கேரளாவில் முன்னறிவிப்பின்றி மின்சாரம் தடைபட்டதால் கே.எஸ்.இ.பி. அலுவலகம் முன்பு மில் உரிமையாளர் அரிசி மாவை தலையில் கொட்டி போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வினோத போராட்டம்
வினோத போராட்டம்pt desk
Published on

செய்தியாளர்: சுமன்

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் வேலுத்தம்பி நகரில் மில் நடத்தி வருபவர் ராஜேஷ். இவர் தோசை மாவு விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு நேற்று முன்தினம் மின் அலுவலகத்தில் இருந்து, 1 மணி முதல் 5 மணி வரை அந்த பகுதியில் மின்தடை ஏற்படும் என மெசேஜ் ஒன்று வந்துள்ளது. இதையடுத்து அவர், முன்கூட்டியே மாவு அரைக்கச் சென்றபோது, மின்சாரம் விட்டு விட்டு வந்ததோடு, 11 மணி முதலே மின்சாரம் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது.

வினோத போராட்டம்
வினோத போராட்டம்pt desk

முன்னறிவிப்பின்றி முன்கூட்டியே மின்சாரம் நிறுத்தப்பட்டதால் மாவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரைத்தும் அரைக்காமலும் இருந்த மாவுடன் மின்துறை அலுவலகத்துக்கு வந்த அவர், தனது எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்தார். சற்று நேரத்தில் தான் கொண்டு வந்த மாவை தலையில் ஊற்றிக் கொண்டு நின்றார். இதனால் அந்தப் பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

வினோத போராட்டம்
கொல்கத்தா: பயிற்சி மருத்துவர் போராட்டத்துக்கு ஆதரவாக பதவியை ராஜினாமா செய்த 54 மூத்த மருத்துவர்கள்!

இது குறித்து மின்துறை அதிகாரிகள் செய்தியாளரிடம் கூறுகையில்... அவசரமாக டிரான்ஸ்பார்மரை மாற்ற வேண்டி இருந்ததால் அந்தப் பகுதியில் மின்சாரம் அறிவித்த நேரத்திற்கு முன்பாக தடைபட்டதாக தகவல் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com