திருச்சூர் பூரம் திருவிழா | ஆம்புலன்ஸில் பயணம்.. சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவு! நடந்தது என்ன?

ஆம்புலன்ஸை தவறாகப் பயன்படுத்தியதாக சுரேஷ் கோபி மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதுடன், முதற்கட்ட விசாரணையையும் தொடங்கியுள்ளனர்.
சுரேஷ் கோபி
சுரேஷ் கோபிஎக்ஸ் தளம்
Published on

கேரள மாநிலம் திருச்சூர் நகரில் ஆண்டுதோறும் பூரம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பு ஆண்டும், கடந்த ஏப்ரல் மாதத்தின்போது, கோலாகலமாகத் தொடங்கியது. வாணவேடிக்கைக்கு அடுத்த நாள், இந்த திருவிழாவில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதேநேரத்தில் இந்த திருவிழாவில் மோதல் ஏற்பட்டதை அடுத்து அப்பகுதிக்கு வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்வதற்காக ஆம்புலன்ஸில் பயணித்து சம்பவ இடத்திற்கு நடிகர் சுரேஷ் கோபி (தற்போது மத்திய இணை அமைச்சர்) சென்றார்.

சுரேஷ் கோபி
சுரேஷ் கோபிஎக்ஸ் தளம்

இந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, ஆம்புலன்ஸை தவறாகப் பயன்படுத்தியதாக சுரேஷ் கோபி மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதுடன், முதற்கட்ட விசாரணையையும் தொடங்கியுள்ளனர். மருத்துவ அவசர தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ், மருத்துவம் அல்லாத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டதாக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த விவகாரத்தில் காவல்துறையினரின் பங்கு குறித்து விசாரணை உட்பட மூன்று நிலை விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: நோபல் பரிசு வென்றதை கொண்டாட மறுத்த தென்கொரிய எழுத்தாளர்! வருத்தமான பின்னணி! உண்மையை உடைத்த தந்தை!

சுரேஷ் கோபி
"மத்திய அமைச்சர் பதவி வேண்டாமா? நான் எப்ப சொன்னேன்?” - அந்தர் பல்டி அடித்த சுரேஷ் கோபி!

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய சுரேஷ் கோபி, "பூரம் திருவிழாவின் குளறுபடிக்கு பின்னல் சதி உள்ளது. இதில் அரசியல் தலையீடு உள்ளதா என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும். அப்பகுதிக்கு வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டதால் ஆம்புலன்சில் சென்றேன்" என்று தெரிவித்தார்.

சுரேஷ் கோபி
சுரேஷ் கோபிpt web

திருச்சூர் மக்களவைத் தொகுதியில் பூரம் திருவிழாவுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் பாஜக சார்பில் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார், அவரது நெருங்கிய போட்டியாளர்களான சிபிஐயின் வி.எஸ்.சுனில்குமார் மற்றும் காங்கிரஸின் கே.முரளீதரனை அவர் தோற்கடித்தார். அவருக்கு பாஜக கூட்டணி அரசு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கியது.

இதையும் படிக்க: அமெரிக்கா | மூன்றாவது முறையாக முயற்சி.. ட்ரம்ப் பிரசாரத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர்!

சுரேஷ் கோபி
கேரளா| ” 'இந்தியாவின் தாய்' இந்திரா காந்தி”-திடீரென காங். புகழ்பாடிய பாஜக அமைச்சர் சுரேஷ் கோபி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com