”கருப்பாக இருப்பதால் கைது செய்றாங்க” - கேரளாவில் உடல் முழுக்க வெள்ளை பெயிண்ட் பூசி இளைஞர் போராட்டம்!

தான் கருப்பாக இருப்பதால் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடித்துக்கொண்டு இளைஞர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
நூதன போராட்டம்
நூதன போராட்டம்புதியதலைமுறை
Published on

கேரளாவில் முதல்வரும், அமைச்சர்களும் மக்களிடம் நேரடியாக சென்று மனுக்கள் பெறும் ‘நவ கேரள சதாஸ்’ நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தநிலையில், ஒரு சில இடங்களில் முதல்வர் பினராயி விஜயன் சாலையில் செல்லும் போது அவருக்கு எதிராக, சில கட்சி அமைப்புகள் கருப்புக்கொடி போராட்டமும் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குழுவினர் இன்று கொல்லம் மாவட்டத்தில் வர இருந்த நிலையில், முற்றிலும் மாறுபட்ட வேடத்துடன் இளைஞர் ஒருவர் போராட்டத்தில் இறங்கினார்.

கொல்லம் மாவட்டம் தளவூரில் நடந்த சம்பவத்தில் பஞ்சாயத்து உறுப்பினர் ரஞ்சித் உடல் முழுவதும் வெள்ளை பெயின்ட் பூசி சாலையில் வந்தார். கருப்பு நிறத்தில் இருப்பதால், முதல்வர் செல்லும் போது போலீசார் கைது செய்ய வாய்ப்பிருப்பதாகவும், உடல் முழுவதும் வெள்ளை நிற பெயிண்ட் அடித்துள்ளதாகவும் ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார்.

இவரது செயல் சரியானதல்ல என்று கூறிய கேரளா காவல் துறையினர், முதலமைச்சர் வருவதற்கு முன்பாக ரஞ்சித்தை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட ரஞ்சித் என்பவர் பா.ஜ.க சார்ந்த ஆதரவாளர் என கூறப்படுகிறது.

நூதன போராட்டம்
ஒரே நாளில் 78: மக்களவையில் திமுக, காங். உள்ளிட்ட 33 பேர், மாநிலங்களவையில் 45 எம்பிக்கள் சஸ்பெண்ட்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com