உலகமே கொரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் வேளையில் கேரளாவில் ஒருவர் 'கொரோனா தேவி' சன்னதி அமைத்து அதனை வழிபடத்தொடங்கியுள்ளார்
சீனாவிலிருந்து பரவத்தொடங்கிய கொரோனாவை ஒழித்துக்கட்ட உலக நாடுகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு
நடவடிக்கைகள் எடுத்து வரும் உலக நாடுகள், கொரோனா என்ற வார்த்தையை அடியோடு மறக்க வேண்டுமென்று போராடுகின்றன.
இந்நிலையில் கேரளாவில் ஒருவர் கொரோனாவுக்கு சன்னதி அமைத்து அதனை வழிபடத்தொடங்கியுள்ளார்
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கடக்கல் பகுதியைச் சேர்ந்தவர் அனிலன். இவர் தனது வீடு அருகே கொரோனாவுக்கு சன்னதி ஒன்றை அமைத்துள்ளார். அங்கு கொரோனா மாதிரியை ஒன்றை நிறுவி அதனை 'கொரோனா தேவி'யாக வழிபட்டு வருகிறார். கொரோனா தேவி குறித்துப் பேசிய அனிலன், இந்து மத நம்பிக்கையின்படி கடவுள் எங்கும் இருக்கிறார். இந்த வைரஸில் கூட இருக்கிறார். கொரோனா தேவிக்குத் தினமும் ஆரத்தி எடுத்து பூஜை செய்யும் அனிலன், பக்தர்களுக்கு தற்போது அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
தரிசனம் இல்லை என்றாலும் மின்னஞ்சல் அனுப்பினால் கொரோனா தேவியின் பிரசாதம் கிடைக்கும் என்றும் அனிலன் கூறியுள்ளார். மேலும் இந்த கொரோனா தேவி சன்னதியை கொரோனாவுக்கு எதிராகப் போராடும் சுகாதார பணியாளர்கள், மருந்து கண்டுபிடிக்கப்
பாடுபடும் விஞ்ஞானிகள், காவலர்கள், தீயணைப்பு வீரர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு அர்ப்பணிப்பதாக அனிலன் தெரிவித்துள்ளார்