கேரளாவில் ஜிகா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது.
கொசுக்கள் மூலம் பரவக்கூடிய ஜிகா வைரஸ் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் வேகமாக பரவி வருகிறது. அப்பகுதியைச் சேர்ந்த பெண் உள்பட 15 பேருக்கு ஏற்கெனவே இத்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒன்றரை வயது குழந்தை உள்பட மேலும் மூவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு இடையே ஜிகா வைரஸ் அச்சுறுத்துவரும் நிலையில், கேரளாவில் நோய்த்தடுப்புப் பணிகளை அம்மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனிடையே கேரளா வந்துள்ள மத்திய அரசின் மருத்துவக்குழுவினர் ஆய்வுப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.