திருவனந்தபுரம்...முதலமைச்சரின் நிவாரண் நிதிக்கு பங்களிக்காத அரசு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மீதான கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது இது உண்மைதானா?
சமீபத்தில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பல பேர் இறந்த நிலையில் , பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவும், நிலங்களை மறுசீரமைப்பதற்கும் கேரள அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு உதவியாக. பல தலைவர்களும் அரசியல் மற்றும் திரைப்பட துறையினரும், பொதுமக்களும் கேரள அரசுக்கு உதவியாக தங்களால் முடிந்த நிவாரண நிதிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவில் அரசு துறையில் பணியாற்றும் ஊழியர்களிடம், சாலரி சேலஞ்ச் (salary challenge) என்ற பெயரில் ஊழியர்களின் அனுமதியின்றி ஐந்துநாள் சம்பளமானது பிடித்தம் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், ஊழியர்களின் எந்த ஒப்புதலும் பெறப்படாமலேயே அவர்களது 5 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என அரசாணையில் உள்ள மேலாண்மை நிறுவனம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் அரசு ஊழியர்கள் தங்களின் வருங்கால வைப்பு நிதியின் மீது கடன் பெறுவதற்கு ஸ்பார்க் என்ற மென்பொருள் வழியாக விண்ணப்பிப்பார்கள். அந்த ஸ்பார்க் மென்பொருளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அரசு ஊழியர்களில் ஒரு பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த ஸ்பார்க் மென்பொருளின் மாற்றத்தால் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பங்களிக்காத அரசு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மீதான கடன் விண்ணப்பங்கள் நிராகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு காங்கிரஸ் அமைப்பான கேரள செயலக சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளது.