அட்ரஸ் தெரியாதவர்களுக்குக்கூட ஆட்டோ ஓட்டுநர் வழிகாட்டுவார் என்ற காலம்போய், இன்று அனைவருக்கும் கூகுள் மேப்-பே வழிகாட்டி வருகிறது. அதன்மூலம் சரியான இடத்துக்குச் செல்பவர்களும் உண்டு. அதேநேரத்தில், ஆபத்தைச் சந்திப்பவர்களும் உண்டு. அப்படியான ஒரு சம்பவம்தான் அண்டை மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
அப்போது அதிர்ஷ்டவசமாக, பயணித்த 4 பேரும் காயம் ஏதுமின்றி பூட் ஸ்பேஸ் வழியாக காரைவிட்டு வெளியேறினர். இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் கிரேன் மூலம் காரை மீட்டனர். கனமழை காரணமாக நிலவிய கடுமையான சீதோஷண நிலையே விபத்து ஏற்பட காரணம் என அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து கார் ஓட்டுநர், ”கால்வாயை தண்ணீர் தேங்கிய சாலை என்று தவறாக எண்ணிவிட்டேன். நான் 10 கிமீ வேகத்தில் ஓட்டிக்கொண்டிருந்தேன். வாகனத்தின் பின்புறம் தண்ணீரில் மூழ்கத் தொடங்கியபோதுதான் நாங்கள் விபத்தை உணர்ந்தோம். காரில் இருந்து ஜன்னல் வழியாக தப்பித்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.