கேரள முதல்வர் நிவாரண நிதி வாயிலாக 738 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
நூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரளாவில் கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு பல தரப்பில் இருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் மழை வெள்ள பாதிப்புக்கு பெறப்பட்ட நிதி தொடர்பாக சட்டப்பேரவை விவாதத்தின் போது பினராயி விஜயன் இதைத் தெரிவித்தார்.
நிலச்சரிவு மற்றும் வெள்ள பாதிப்பு பகுதிகளில் மறுவாழ்வு செய்யப்படவேண்டிய இடங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை முதல்வர் நிவாரண நிதிக்கு 738 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் நிதி உதவி அளித்தற்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் பினராயி விஜயன் கூறினார்.