கேராளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க இந்திய ராணுவம் உள்பட பல்வேறு துறைகள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சகம், இந்திய ராணுவம் சார்பாக 5 மருத்துவக் குழுக்கள், இரண்டு நவீன ரக ஹெலிகாப்டர்கள், 2 செட்டாக் ஹெலிகாப்டர்கள், 2 மீட்புப் பணிக் குழுக்கள் அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன் கப்பல் படை சார்பாக, 10 மீட்புக் குழுக்கள், 10 இயந்திரப் படகுகள், ஒரு நவீன ஹெலிகாப்டர், ஒரு சீக்கிங் ஹெலிகாப்டர் போன்றவை அனுப்பப்பட்டுள்ளது. இந்திய விமான படை சார்பாக, இரண்டு எம் ஐ- 17 ரகம் கொண்ட ஹெலிகாப்டர்கள், ஒரு நவீன ரக ஹெலிகாப்டர்கள் போன்றவை சென்று உள்ளன. இதேபோன்று, இந்திய கடலோர பாதுகாப்பு படைகள் மூலம் 6 இயந்திர படகுகளும், 4 சாதாரண படகுகளும், 21 வாடகை படகுகளும் மீட்பு பணிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Read Also -> கேரளாவுக்கு நடிகர் விக்ரம் ரூ.35 லட்சம் நிதியுதவி
Read Also -> கேரளாவுக்கு ரூ.35 கோடி அளிக்கும் கத்தார்
கேரள மழை வெள்ளத்தில் 23 ஆயிரத்து 213 பேர் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கேரள மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த 23 ஆயிரத்து 213 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் துண்டிக்கப்பட்ட 42 பகுதிகளைச் சேர்ந்த சாலைகளை இந்திய ராணுவத்தினர் சீரமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள 22 பகுதிகள் சீரமைக்கப்பட்டுள்ளதாவும், தற்காலிகமாக 15 பாலங்கள் கட்டப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.