கேரளா | உயிர்களை பறித்த மின்சார வேலி.. தவறிவிழுந்த தந்தையும், காப்பாற்ற சென்ற மகனும் பரிதாப மரணம்!

கேரளாவை அடுத்த வாளையார் பகுதியில் கால்வாயில் தவறி விழுந்த தந்தையை காப்பாற்ற சென்ற மகன்; இருவரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இறந்து கிடந்த பாம்பு
இறந்து கிடந்த பாம்புகூகுள்
Published on

கேரளாவை அடுத்த வாளையார் பகுதியில் கால்வாயில் தவறி விழுந்த தந்தையை காப்பாற்ற சென்ற மகன்; இருவரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கேரளாவை அடுத்துள்ள வாளையார் பகுதியில் வசித்து வருபவர் ஜெயராமன். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நிலத்தில் நெல்சாகுபடி செய்து வருகிறார். இவரது விவசாய நிலத்தை மோகனன் என்பவர் கவனித்து வருகிறார். மோகனனுக்கு மனைவியும் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். சமீபத்தில் மகளுக்கு திருமணம நிச்சயர்தார்த்தம் முடிந்து இன்னும் சில நாட்களில் திருமணம் நடைப்பெற இருக்கிறது. மகன் அனிருத் படித்து வருவதாகக்கூறப்படுகிறது.

இறந்து கிடந்த பாம்பு
கேரளா | பேருந்தில் சில்மிஷம்.. ஜன்னல் வழியாக குதித்து தப்பியோடியவரை துரத்திப் பிடித்த சிங்கப் பெண்!

அப்பகுதியில் நிறைய பன்றிகள் விவசாயநிலத்தில் பயிரிடப்படும் பயிற்களை தொடர்ந்து நாசம் செய்து வருவதால், விவசாயிகள் சிலர் தங்களின் நிலங்களைக் காக்கும் பொருட்டு பன்றியைப் பிடிக்க மின்சாரவேலியை பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

சம்பவ தினத்தன்று அனிருத்தின் நண்பன் சனாதன் என்பவர் தனது வீட்டிலிருந்து அட்டப்பள்ளம் என்ற இடத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது ஜெயராமனுக்கு சொந்தமான நிலத்தின் கால்வாயில் மோகனன் விழுந்து கிடப்பதைப்பார்த்த சனாதன் உடனடியாக தனது நண்பன் அனிருத்திடம் விஷயத்தை கூறியுள்ளார்.

இறந்து கிடந்தவர்கள்
இறந்து கிடந்தவர்கள்

கால்வாயில் விழுந்து கிடந்த தந்தையைத் தூக்குவதற்காக சம்பவ இடத்திற்கு வந்த அனிருத், சனாதன் கண்ணெதிரே தண்ணீரில் குதித்துள்ளார். ஆனால் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்திருந்தது தெரியாத நிலையில் மின்சாரம் தாக்கி அனிருத் துடிதுடித்துள்ளார்.

உடனடியாக நண்பனைக் காப்பாற்ற நினைத்த சனாதன் தனது தந்தையை தொடர்புக்கொண்டு உதவிக்கு அழைத்துள்ளார். அவரது தந்தையும் அருகில் இருந்த மக்களும் வந்து கால்வாயில் கிடந்த தந்தை மகனை மீட்டனர். ஆனால் அதற்குள் இருவரும் இறந்தது தெரியவந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் சோதனை மேற்கொண்ட சமயம் அங்கு மின்சாரம் தாக்கி பாம்பு ஒன்றும் செத்துக்கிடந்தது தெரியவந்தது. இருப்பினும் அப்பகுதியை சோதனை செய்த போலிசார் அப்பகுதி முழுவதும் சுமார் 150 மீட்டர் தூரத்திற்கு பன்றியை பிடிப்பதற்காக சட்டவிரோதமாக மின்சாரம் உபயோகப்படுத்தி வந்ததை கண்டறிந்தனர். அதில் ஒரு கம்பியானது கால்வாயில் விழுந்து தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து தந்தையும் மகனும் இறந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் மின் திருட்டு மற்றும் அபாயகரமான லைன் இழுத்தல் போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com