"யானை தற்செயலாக வெடிமருந்து நிரப்பிய பழத்தை சாப்பிட்டு இருக்கலாம்"

"யானை தற்செயலாக வெடிமருந்து நிரப்பிய பழத்தை சாப்பிட்டு இருக்கலாம்"

"யானை தற்செயலாக வெடிமருந்து நிரப்பிய பழத்தை சாப்பிட்டு இருக்கலாம்"
Published on

கேரளாவில் கர்ப்பணி யானை தற்செயலாக வெடிமருந்து நிரப்பப்பட்ட பழங்களை சாப்பிட்டிருக்கலாம் என சுற்றுச் சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் 15 வயது கர்ப்பிணி யானை வெடிமருந்து நிரப்பப்பட்ட அன்னாசி பழத்தை உண்டதால் வாய், தாடைகளில் பலத்த காயமடைந்து உயிரிழந்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது. இந்தச் சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில் தற்போது சுற்றுசூழல் அமைச்சகம் இது குறித்து ஒரு முக்கியமானத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில் “ முதல்கட்ட விசாரணையில் யானையானது தற்செயலாக வெடிமருந்து நிரப்பப்பட்ட பழங்களை சாப்பிட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. நாங்கள் தொடர்ச்சியாக கேரள அரசுடன் தொடர்பில் இருக்கிறோம். யானை உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை விரைவில் பிடிக்க அரசுக்குத் தேவையான விரிவான ஆலோசனைத் திட்டத்தை நாங்கள் கொடுத்திருக்கிறோம். இந்தச் சம்பவத்திற்கு வழி வகுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com