கேரளா: பெட்ரோலுக்கு பணம் தராமல் சென்ற போலீஸ்.. தட்டிக்கேட்ட ஊழியரை காரில் இழுத்துச்சென்ற அவலம்!

கேரள மாநிலம் கண்ணூரில் போலீஸ் அதிகாரி தனது காரின் முகப்பில் பெட்ரோல் பங்க் ஊழியரை ஏற்றிக்கொண்டு சென்ற சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கார்
கார்ட்விட்டர்
Published on

கேரள மாநிலம் கண்ணூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தோஷ்குமார் என்ற போலீஸ் அதிகாரி ஒருவர் தனது காருக்கு பெட்ரோல் போடுவதற்காக அங்கிருக்கும் ஒரு பெட்ரோல் பங்கிற்கு சென்றிருக்கிறார். அங்கு அவரது காருக்கு 2,100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்ட ஊழியர் அணில் என்பவர் பெட்ரோலுக்கான பணத்தைக் கேட்டுள்ளார்.

முதலில் தர மறுத்த சந்தோஷ்குமார் பிறகு 1,900 ரூபாயை அணிலிடம் கொடுத்து இருக்கிறார். பாக்கி தொகையான 200 ரூபாயை அணில் அவரிடம் கேட்கவே... இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் சந்தோஷ்குமார் பணம் கொடுக்க மறுத்ததுடன், தனது காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்ப நினைத்து காரை ஆன் செய்துள்ளார். அவரது காரை வழிமறித்தப்படி காருக்கு முன்னால் வந்து நின்ற அணில், பணத்தை கொடுத்துவிட்டு காரை எடுத்துச்செலுங்கள் என்று கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரம் கொண்ட சந்தோஷ்குமார், காரை அணில் மீது மோதியுள்ளார். இதில் அணில் காரின் பேனட்டில் ஒட்டிக்கொள்ள.... காரை நிறுத்தாமல் கிட்டத்தட்ட 150 மீட்டர் வரை ஓட்டிச்சென்றுள்ளார் சந்தோஷ்குமார்.

கார்
கேரளா: ‘எவர்சில்வர் வெடிகுண்டு’ என நினைத்து பயந்த மக்கள்.. நிபுணர்கள் சோதனையில் தெரியவந்த ட்விஸ்ட்!

காரின் முகப்பில் அணில் தொற்றிவர கார் வேகமாக போவதை கண்ட டிராபிக் போலீஸ் காரை நிறுத்தி விசாரித்துள்ளார். குற்றம் சந்தோஷ்குமார் மீது இருந்ததைத் தெரிந்துக்கொண்ட டிராபிக் போலீஸ், இருவரையும் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

வழக்கை விசாரித்த போலீஸ் கமிஷனர், சந்தோஷ்குமார் குற்றவாளி என்று கூறி அவரின் மீது கொலைமுயற்சி, ஏமாற்றுதல் போன்ற வழக்கு பதிவு செய்ததுடன் வேலையிலிருந்து அவரை சஸ்பென்ட் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com