’ஓகி’ பாதிப்பு: 1 மாத சம்பளத்தை வழங்கிய கேரள அமைச்சரவை உறுப்பினர்கள்

’ஓகி’ பாதிப்பு: 1 மாத சம்பளத்தை வழங்கிய கேரள அமைச்சரவை உறுப்பினர்கள்
’ஓகி’ பாதிப்பு: 1 மாத சம்பளத்தை வழங்கிய கேரள அமைச்சரவை உறுப்பினர்கள்
Published on

கேரள அமைச்சரவை உறுப்பினர்கள், தங்களது ஒரு மாத சம்பளத்தை ஓகி புயல் நிவாரணத்துக்கு வழங்கியுள்ளனர்.

சமீபத்தில் ஏற்பட்ட ஓகி புயல் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமாரி மற்றும் கேரள  கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் புயலில் சிக்கி பலியானார்கள். இன்னும் பல மீனவர்களை காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் ஓகி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு கேரள அமைச்சரவை உறுப்பினர்கள், தங்கள் ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com