வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை ஓவியங்கள் மூலம் காட்சிப்படுத்தி, இடுக்கி மாவட்ட ஓவியர் ஒருவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி ரோசாப்புக்கண்டம் பகுதியை சேர்ந்தவர் ஓவியர் அப்துல் ரசாக். ஓவியங்கள் வரைவதில் வல்லவரான இவர், தற்போது கொரோனா பொது முடக்க காலத்தில் கிடைத்த நேரத்தை அதிக ஓவியங்கள் வரைவதில் செலவிட்டார். இதனால் அதிகளவிலான ஓவியங்கள் வரைய வாய்ப்பு கிடைத்தது.
இதையடுத்து ஓவியங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்த அவர், முக்கிய வரலாற்று நிகழ்வுகளை ஓவியங்களாக வரைந்து அதை காட்சிப்படுத்த ஆரம்பித்துள்ளார். இதில் முக்கிய தலைவர்களின் பிறந்த நாள் துவங்கி வரலாற்றின் முக்கிய நாட்களை நினைவு கூறும் விதமாக அந்த நாளின் சிறப்பை கூறும் தனது ஓவியங்களை காட்சிப்படுத்துகிறார்.
அதோடு அந்த நாளின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தியும் வருகிறார். இது அனைத்து தரப்பினரின் பாராட்டை பெறுவதாக அமைந்துள்ளது.