கேரள மாநிலம் வாகமண் பகுதியில் மலைகளுக்கு இடையே நடந்த (Off road) ஜீப் ரேஸில் தலைகுப்புற ஜீப் உருண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வாகமண் என்ற பகுதியில் மலைமுகடுகளுக்கு இடையே அவ்வப்போது முறையான அனுமதி பெறாமல் (Off road) ஜீப் ரேஸ் நடப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று முறையான அனுமதி பெறாமல் ழகக - சுழயன - பிரியர்கள் அமைப்பு ஒன்று ஜீப் ரேஸ் வைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதில் பல ஜீப் ஓட்டுனர்களும் கலந்து கொண்டு தங்களின் ஜீப் ஒட்டும் திறமையை வெளிப்படுத்தினர். இதில் ஒரு ஜீப் திடீரென 3 முறை தலைகுப்புற கவிழ்ந்து உருண்டு மீண்டும் பழைய நிலைக்கு வந்த ஜீப்பை மீண்டும் இயக்கிய ஒட்டுனர் மலைமுகட்டில் கொண்டு வந்தார்.
இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் கேரள வனத்துறையும், கேரள போக்குவரத்துத் துறையும் முறையான நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.