‘காஷ்மீரை விட்டே போறோம்’ கலங்கிய கண்களுடன் ஆசிஃபா குடும்பம்!

‘காஷ்மீரை விட்டே போறோம்’ கலங்கிய கண்களுடன் ஆசிஃபா குடும்பம்!
‘காஷ்மீரை விட்டே போறோம்’ கலங்கிய கண்களுடன் ஆசிஃபா குடும்பம்!
Published on

தங்கள் மகளுக்கு நேர்ந்த துயர சம்பவத்தையடுத்து ஆசிஃபாவின் குடும்பத்தினர் காஷ்மீரை விட்டே வெளியேறும் முடிவுக்கு வந்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் ஆசிஃபா என்ற 8 ‌வயது சிறுமி, 8 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது மட்டுமின்றி, கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. பலரும் ஆசிஃபாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.  வழிபாட்டுத்தலம் ஒன்றில் மறைத்து வைத்து அந்தச் சிறுமி பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது அனைத்து தரப்பினருக்குக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக டெல்லி தடயவியல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், 18 வயது நிரம்பாத அந்த சிறுவன், 7 பேர் இந்தக் குற்றச்சம்பவத்தை அரங்கேற்றியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

இதுதொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மனித குலத்திற்கே‌ எதிரானவை என்று கண்டனம் தெரிவித்துள்ளார். அத்தகைய குற்றம் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார் மனிதர்களாக நாம் தோல்வியடைந்துவிட்டோம் என்று வேதனை குரலை பதிவு செய்துள்ளார். மத்திய‌ அமைச்சர் வி.கே. சிங், இது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், "நிச்சயம் அந்தச் சிறுமிக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்படும் என்று ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி, உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில் ஆசிஃபாவின் தந்தை முகமது யூசஃப் புஜ்வாலா, இருந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். தன் மகளுக்கு நேர்ந்த துயர சம்பவத்தை அடுத்து, தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் அவர் அந்த பகுதியை விட்டு சென்றுள்ளார். அதுமட்டுமின்றி அடுத்த மாதத்திற்குள் காஷ்மீரை விட்டே வெளியேற ஆசிஃபாவின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். தனது இரண்டு குழந்தைகளுடன் பாதுகாப்பு இருக்கும் இடத்தைத் தேடி செல்ல உள்ளதாகவும், தங்கள் மகளின் நினைவுகள் மிகுந்த வருத்தம் அளிப்பதால் செல்வதாகவும் ஆசிஃபாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com