‘370 சட்டப்பிரிவு தற்காலிகமானது’ - அமித்ஷாவுக்கு காஷ்மீர் பண்டிட்டுகள் வரவேற்பு

‘370 சட்டப்பிரிவு தற்காலிகமானது’ - அமித்ஷாவுக்கு காஷ்மீர் பண்டிட்டுகள் வரவேற்பு
‘370 சட்டப்பிரிவு தற்காலிகமானது’ - அமித்ஷாவுக்கு காஷ்மீர் பண்டிட்டுகள் வரவேற்பு
Published on

ஜம்மு-காஷ்மீருக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு தற்காலிகமானதுதான் என்று கூறிய அமித்ஷாவின் கருத்துக்கு காஷ்மீர் பண்டிட்டுகள் வரவேற்பு அளித்துள்ளதனர்.

சமீபத்தில் மக்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினார். அப்போது, காஷ்மீர் பிரச்னை இன்றளவும் இருப்பதற்கு நேருவும், காங்கிரசும்தான் காரணம் என்று அவர் கடுமையாக சாடியிருந்தார். மேலும், 370 சட்டப்பிரிவு தற்காலிகமானதுதான், நிரந்தரமானது அல்ல என்று அமித்ஷா கூறியிருந்தார்.

புலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகள் அமைப்பைச் சேர்ந்த பனுன் என்பவர் அமித்ஷா பேச்சு குறித்து கூறுகையில், “மக்களவையில் உள்துறை அமைச்சர் பேசியுள்ள கருத்து உண்மையானது. உணர்வுபூர்வமானது. 370 சட்டப்பிரிவு நீக்கப்பட வேண்டும். அதற்கான நேரம் இது. அந்தச் சட்டப்பிரிவு காஷ்மீர் முஸ்லிம்களை தனித்தீவாக மாற்றியுள்ளது. காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வளர்க்க ஏதுவாக மாறியது. காஷ்மீரில் பயங்கரவாதம் ஒழிய வேண்டும் என அமித்ஷா கூறியுள்ளார். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை பண்டிட்டுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com