ஜம்மு காஷ்மீரில் போலீசார் பொது இடங்களில் தொழுகையில் ஈடுபட வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகரில் பெரிய மசூதியில் காவல் பணியில் இருந்த போலீஸ் அதிகாரி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, அம்மாநில காவல்துறை பொது இடங்களில் ரமலான் தொழுகையில் ஈடுபட வேண்டாம் என போலீசாருக்கு அறிவுரை வழங்கியுள்ளது. மாவட்டங்களில் போலீஸ் அனுமதி பெற்ற மசூதிகள் மற்றும் பாதுகாப்பு நிறைந்த மசூதிகளில் தொழுகையில் ஈடுபட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பொதுவான மசூதிகள் மற்றும் தனிமையான இடங்களில் ரமலான் தொழுகையை நடத்ததாதீர்கள் என போலீஸ் கட்டுப்பாட்டு அறை போலீசார் அனைவருக்கும் அறிவுரையை வழங்கியுள்ளனர். பாதுகாப்பு நிறைந்த மசூதிகளில் மட்டும் தொழுகையில் ஈடுபடுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளது. ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது மிகவும் சரியானது என போலீஸ் அதிகாரி எஸ்பி வாய்த் கூறியுள்ளார். “அவர்கள் (போலீசார்) என்னுடையவர்கள், அவர்களுக்கு நான் அறிவுரை வழங்கியுள்ளேன். அவர்கள் என்னுடைய குழந்தைகள் ஆவர். எனவே முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது,” என்றார்.