கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் சமூக இடைவெளியின் முக்கியத்துவம் குறித்து கார்த்திக் ஆர்யன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆர்யன், 2011ஆம் ஆண்டில் ‘பியார் கா புஞ்சனாமா’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் நடித்த சில படங்கள் தொடக்கத்தில் வசூல் ரீதியாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் போகபோக சில படங்கள் வரவேற்பை பெற்றன.
இந்நிலையில், கொரோனா பீதி உலகம் முழுவதும் சுற்றி வரும் நிலையில், அதிலிருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து நடிகர் கார்த்திக் ஆரியன் வீடியோ மூலம் அறிவுறுத்தியுள்ளார். அதில், “இது கோடை விடுமுறைகள் அல்ல, கொஞ்சம் அவமானம். ஐ.பி.எல், கூடைப்பந்து, பிரீமியர் லீக், பள்ளிகள், கல்லூரிகள், அனைத்தும் மூடப்பட்டுள்ளன. திரைப்பட வெளியீடுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
எனவே நீங்கள் பார்டிக்கு செல்வதை தவிருங்கள். பயணம் மேற்கொள்வதோ, மக்களைச் சந்திக்கவோ வேண்டாம், நெட்ஃபிலிக்ஸில் படம் பாருங்கள். வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள், பெற்றோருடன் நேரத்தை செலவிடுங்கள், ஒருவரையொருவர் நம்புங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக பாலிவுட் பிரபலங்கள் கார்த்திக் ஆர்யனுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.