’சம்பாதிக்க சொல்லுங்க’ - மாதம் ரூ.6 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட பெண்.. ஆலோசனை கூறிய நீதிமன்றம்! #Video

கணவரிடமிருந்து மாதம் ரூ.6 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட பெண் ஒருவருக்கு, நீதிமன்றம் ஆலோசனை கூறியுள்ளது.
model image
model imagex page
Published on

விவாகரத்து கேட்டு வழக்கு தொடரும் பெண்களுக்கு, அவரது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அந்த வகையில், பெண் ஒருவர் தன் கணவரிடமிருந்து ரூ. 6.16 லட்சம் ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததுடன், அதற்கான பட்டியலை தெரிவித்திருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, அந்தப் பெண் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், “முழங்கால் வலி மற்றும் அதற்கு பிசியோதெரபி செய்வதற்காக மாதம் 4-5 லட்சம் ரூபாயும், ஆடைகள் வாங்க மாதம் 15,000 ரூபாயும், சாப்பாட்டுக்கு 60,000 ரூபாயும், சட்டக் கட்டணமாக 50,000 ரூபாயும் வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

இந்த மனுவைப் படித்த நீதிபதி லலிதா கன்னேகந்தி, சற்றே வியந்துபோனதுடன் தொடர்ந்து விசாரணை நடத்தியுள்ளார். இதுகுறித்து அந்தப் பெண்ணின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “எனது மனுதாரர் தற்போது வாழ்ந்துவரும் வாழ்க்கையை அப்படியே தொடருவதற்காக இந்த நியாயமான தொகையை கணவரிடம் இருந்து எதிர்பார்க்கிறார்” என்றார்.

இதையும் படிக்க: A1, A2 பால் பொருட்களா? உடனே அகற்றவும்.. உணவு தர நிர்ணய அமைப்பு உத்தரவு!

model image
‘ஜீவனாம்சம்’ கேட்ட மனைவிக்கு நீதிமன்றத்தில் வைத்து காதலர் தின கிஃப்ட் கொடுத்த கணவர்; கடுப்பான மனைவி!

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ”கணவரிடம் இருந்து மனைவி கேட்கும் தொகையை அப்படியே கொடுத்துவிட உத்தரவிட முடியாது. கணவர் எவ்வளவு ஊதியம் பெறுகிறார் அல்லது எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதுடன் அடிப்படை தேவைகளை பொறுத்தே உத்தரவிட முடியும்.

கணவர் 10 கோடி சம்பாதிக்கிறார் என்றால், மனைவிக்கு மாதம் 5 கோடி தர வேண்டும் என்றெல்லாம் உத்தரவிட முடியாது. உங்களின் அடிப்படைத் தேவைகளுக்கான பணம் எவ்வளவு, இவ்வளவு பணம் கேட்பதற்கான காரணம் என்ன என்பதைக் கூற வேண்டும். இல்லாவிட்டால், மனு உடனடியாக தள்ளுபடி செய்யப்படும்.

ஒரு மாதச் செலவுக்கு 6,16,000 ரூபாய் என்பது எல்லாம் மிக அதிகம். இவ்வளவு பணத்தை ஒருவர் செலவு செய்வாரா? தனியாக இருக்கும் பெண் இவ்வளவு பணத்தைச் செலவு செய்வாரா? அவருக்கு அவ்வளவு பணம் வேண்டும் என்றால், சம்பாதிக்கச் சொல்லுங்கள். கணவரிடம் இருந்து இதனை எதிர்பார்க்க வேண்டாம். கடைசியாக உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறோம். உங்களின் அடிப்படைத் தேவைக்கு மட்டும் எவ்வளவு தொகை வேண்டுமோ, அதனை மட்டும் கேளுங்கள். அப்படி இல்லாவிட்டால், உங்கள் மனு நிச்சயம் நிராகரிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு தடை.. ரூ.25 கோடி அபராதம்.. செபி அதிரடி!

model image
’வருமானமே இல்லாட்டியும் ஜீவனாம்சம் கொடுக்கணும்’ - கணவருக்கு கண்டிஷன் போட்ட நீதிமன்றம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com