‘எடியூரப்பா நீக்கப்பட்டால் கர்நாடகாவுக்கு சிக்கல்’: லிங்காயத்து மடாதிபதிகள் எச்சரிக்கை

‘எடியூரப்பா நீக்கப்பட்டால் கர்நாடகாவுக்கு சிக்கல்’: லிங்காயத்து மடாதிபதிகள் எச்சரிக்கை
‘எடியூரப்பா நீக்கப்பட்டால் கர்நாடகாவுக்கு சிக்கல்’: லிங்காயத்து மடாதிபதிகள் எச்சரிக்கை
Published on

பெங்களூருவின் அரண்மனை மைதானத்தில் இன்று நடந்த மிகப்பெரிய மாநாட்டில் ஏராளமான லிங்காயத்து மடாதிபதிகள் பங்கேற்று, கர்நாடக முதலமைச்சராக  எடியூரப்பாவே தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்

மாநில முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பாவை மாற்றக்கூடாது என்று கூறி கர்நாடகாவைச் சேர்ந்த லிங்காயத்து மடாதிபதிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பல மடங்களை சேர்ந்த மடாதிபதிகளின் கூட்டத்திற்கு பிறகு, இம்மாநாட்டின் கோரிக்கை குறித்து பேசிய பலேஹோசூர் மடத்தின் மடாதிபதி திங்கலேஸ்வர சுவாமி, டியூரப்பா தலைமையிலேயே அனைத்து தீர்வுகளும் காணப்பட வேண்டும் என்றார். அவர் நீக்கப்பட்டால் கர்நாடகா மேலும் சிக்கல்களை சந்திக்கும் என்றும் அவர் கூறினார். இந்த மாநாடு டியூரப்பாவுக்கு ஆதரவைத் திரட்டுவதற்கும், பாஜக தலைமைக்கு ஒரு செய்தியை அனுப்புவதற்குமான முயற்சியாக பார்க்கப்படுகிறது.

முதல்வர் மாற்றம் தொடர்பாக இன்று மாலை பாஜக தலைமையின் உத்தரவினைப் பெற்றவுடன், தனது அடுத்தக்கட்ட நகர்வு பற்றி அறிவிப்பதாக எடியூரப்பா தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர், "மாலை முடிவு வந்தவுடன், நீங்கள் எனது அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி அறிந்து கொள்வீர்கள், அதன்பின்னர் நான்  ஒரு பொருத்தமான முடிவை எடுப்பேன்" என்று கூறினார். திங்கள்கிழமைதான் முதல்வர் அலுவலகத்தில் தனது கடைசி நாளாக இருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

டியூரப்பாவை மாற்ற பாஜக முயற்சித்தால் அது ஒரு சகாப்தத்தின் முடிவாக இருக்கும் என்று கர்நாடக முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மனூர் சிவசங்கரப்பா சமீபத்தில் தெரிவித்திருந்தார். மூத்த பாஜக தலைவருக்கு வீரசைவ-லிங்காயத்து சமூகத்தின் ஆதரவு இருப்பதாகவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com