அதிக சைபர் குற்றங்கள் நடந்த மாநிலங்களில் கர்நாடகா முதலிடம்.!

அதிக சைபர் குற்றங்கள் நடந்த மாநிலங்களில் கர்நாடகா முதலிடம்.!
அதிக சைபர் குற்றங்கள் நடந்த மாநிலங்களில் கர்நாடகா முதலிடம்.!
Published on

கடந்த ஆண்டில் முதலிடம் வகித்த உத்தரப்பிரதேசத்தை சைபர் குற்ற விகிதங்களில் முந்தியுள்ளது கர்நாடகா. நாடு முழுவதும் 63.48 சதவீத குற்றங்கள் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் ஒன்பது வழக்குகளில் பத்து பேரை மட்டுமே சிறைக்கு அனுப்பமுடிகிறது. 35 வழக்குகளில் 25.7 சதவீத வழக்குகளில் விசாரணைகள் முடிந்து குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். 26 வழக்குகளில் 31 பேர் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டுடன் 2018ம் ஆண்டை ஒப்பிடும்போது தண்டனை விகிதம் 2.3 சதவிகிதமாக இருந்தது. கர்நாடக மாநிலத்தில் 2017ம் ஆண்டில் ஒரு வழக்கில்கூட தண்டனை வழங்கப்படவில்லை. இதுமட்டுமல்ல, 2019 தேசிய குற்ற ஆவணப் பதிவுகளின்படி, கர்நாடக மாநிலத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 93.1 சதவீதமாகவும், விசாரணைகள் நிலுவையில் உள்ளவை 95.6 சதவீதமாகவும் உள்ளது.

கடந்த ஆண்டில் நாடு முழுவதும் நடந்த சைபர் குற்றங்களின் எண்ணிக்கை 44,456. கர்நாடக மாநிலத்தில் 12, 020 வழக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் 11,416 வழக்குகளும் மகாராஷ்டிராவில் 3,604 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com