கர்நாடகாவில் இருந்து கன்னியாகுமரிக்கு காந்தி போல் வேடமிட்டு வந்த முதியவர் விருதுநகரில் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்தார்.
காந்திய கருத்துகளைக்கொண்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கர்நாடகாவில் இருந்து கன்னியாகுமரி வரை நடைபயணம் மேற்கொள்ளும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த முத்தண்ணா என்பவர் விருதுநகர் வந்தார்.
கர்நாடகாவிலிருந்து கடந்த 9 ஆம் தேதி துவங்கிய பாத யாத்திரையாக காந்தி ஜெயந்தி அன்று கன்னியாகுமரி சென்றடைகிறார். இதையடுத்து பாத யாத்திரையின் ஒரு பகுதியாக மதுரையிலிருந்து விருதுநகர் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வந்த முத்தண்ணா மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாத ரெட்டியை சந்தித்து பாத யாத்திரை நோக்கம் குறித்து விவரித்தார். அதனைத் தொடர்ந்து கோவில்பட்டிக்கு பாத யாத்திரையை துவக்கினார்.