கர்நாடகாவில் கன்னடர்களுக்கே வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என அங்குள்ள தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரைவில் உத்தரவு வெளியாகும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் மெக்கானிக், க்ளெர்க், கணக்காளர், ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட "C" மற்றும் "D" பிரிவு பணிகளில் கன்னடர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் என அம்மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது. "வொயிட் காலர்" பணி எனப்படும் "A" மற்றும் "B" பிரிவு நிர்வாக உயர் பதவிகளில் கன்னடர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து நிறுவனங்களுக்கும் விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும், அரசின் சலுகைகளை பெறாத நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் எனவும் கர்நாடக சட்டத்துறை அமைச்சர் மதுசுவாமி தெரிவித்துள்ளார்.