கர்நாடகாவில் எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீட்டை உயர்த்தும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் பட்டியலினத்தவருக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்படுவதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கர்நாடகத்தில் இடஒதுக்கீடு அதிகரிப்பதால் மொத்த இடஒதுக்கீடு 56 சதவிகிதம் உயர உள்ளது. இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் சட்டத்திற்கு அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆனால், அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் அவசர சட்டம் நிறைவேற்றப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர்... பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு குறித்து ஆணையத்தின் அறிக்கை வந்த பிறகு முடிவு செய்யப்படும் என்றார். இதனிடையே எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரிக்க காங்கிரஸ் கட்சி தான் காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.