முகாம் மக்களுக்கு பிஸ்கெட்டை தூக்கி எறிந்த அமைச்சர்

முகாம் மக்களுக்கு பிஸ்கெட்டை தூக்கி எறிந்த அமைச்சர்
முகாம் மக்களுக்கு பிஸ்கெட்டை தூக்கி எறிந்த அமைச்சர்
Published on

நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்காக சென்ற அமைச்சர் பிஸ்கட் பாக்கெட்டுகளை மக்கள் கையில் வழங்காமல் தூக்கி எறிந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள குடகு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகளை வெள்ளம் சூழந்ததால் ராமநாதபுரா என்னுமிடத்தைச் சேர்ந்த மக்களை மாவட்ட நிர்வாகம் முகாம்களில் தங்க வைத்துள்ளது. அவ்வாறு தங்கியிருப்பவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், கர்நாடக முதல்வர் குமாரசாமியின் சகோதரரும், கர்நாடக வருவாய்த்துறை அமைச்சருமான ரேவண்ணா ரெட்டி சென்றார்.

முகாமில் தங்கியிருப்பவர்களுக்கு பிஸ்கெட் பாக்கெட்டுகளை வழங்கிய ரேவண்ணா ரெட்டி அவற்றை மக்களின் கைகளில் தராமல் தூக்கி எறியும் காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பசியோடு அமைச்சரிடம் கையை நீட்டும்போது அதனை கைகளில் கொடுக்காமல் தூக்கி வீசுகிறார் அமைச்சர். இதனையடுத்து முகாம்களில் இருந்த நபர்களில் சிலர் அந்த பிஸ்கெட் பாக்கெட்டுகளை எடுக்க மறுத்துவிட்டனர். இதனிடையே தன் தந்தையின் செயலுக்கு தான் மன்னிப்பு கேட்பதாக அவரின் மகன் பிரஜ்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர் கூறும்போது, “என் தந்தையின் செயலில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. அவசரம் அவசரமாக செய்ததால் அவ்வாறு நேர்ந்துவிட்டது. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com