கர்நாடகா | முடா முறைகேடு வழக்கு – முதல்வர் சித்தராமையா மனைவியிடம் லோக் ஆயுக்தா போலீசார் விசாரணை

முடா முறைகேடு வழக்கு தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியிடம் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக லோக் ஆயுக்தா போலீசார் விசாரணை நடத்தினர்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா
கர்நாடக முதல்வர் சித்தராமையாpt desk
Published on

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

முடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து, மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகளை வாங்கிக் கொடுத்ததாக, சித்தராமையா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன், நிலத்தை விற்பனை செய்த தேவராஜ் ஆகியோர் மீது, லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Police office
Police officep;t desk

இந்த வழக்கில், இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள முதல்வரின் மனைவி பார்வதி, விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால், இந்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மைசூரு முடா அலுவலகத்திற்கு பார்வதி சத்தமே இல்லாமல் வந்தார். அவரிடம், லோக் ஆயுக்தா எஸ்.பி., யுதேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நான்கு மணி நேரத்துக்கு மேலாக இந்த விசாரணை நடந்தது.

கர்நாடக முதல்வர் சித்தராமையா
70 ஆண்டுக்கு பிறகு ஒரே நாளில் கொட்டித்தீர்த்த கனமழை.. தூக்கம் தொலைத்த தூங்கா நகரம் மதுரை!

நான்கு மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து லோக் ஆயுக்தா அலுவலக ஊழியர்களுக்கு கூட தெரியவில்லை. இந்த வழக்கில், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சித்தராமையாவிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என லோக் ஆயுக்தா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com