எடியூரப்பாவை சந்தித்த கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினருக்கும் கொரோனா !

எடியூரப்பாவை சந்தித்த கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினருக்கும் கொரோனா !
எடியூரப்பாவை சந்தித்த கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினருக்கும் கொரோனா !
Published on

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை அண்மையில் தொடர்புக் கொண்ட அம்மாநில எம்எல்ஏ ஹரீஷ் பூஞ்சாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் பெல்தங்காடி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக இருப்பவர் ஹரீஷ் பூஞ்சா. இவருக்கு லேசான காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் அவர் நேற்று கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அதில் ஹரீஷ் பூஞ்சாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர் "எனக்கு வேறு எந்த அறிகுறிகளும் இல்லை. அதனால், வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறேன்" என தெரிவித்துள்ளார்.

இவர் அண்மையில் பெங்களூருவில் முதல்வர் எடியூரப்பாவை தொகுதி தொடர்பாக சந்தித்து பேசினார். அண்மையில எடியூரப்பாவின் காவேரி இல்லத்தில் பணியாற்றும் சமையல் கலைஞர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, எடியூரப்பாவுக்கும், அவரது மகளுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதேபோன்று, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து இருவரும் பெங்களூர் மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com