அதிருப்தி எம்.எல்.ஏக்களை சந்திக்க கர்நாடக அமைச்சருக்கு அனுமதி மறுப்பு

அதிருப்தி எம்.எல்.ஏக்களை சந்திக்க கர்நாடக அமைச்சருக்கு அனுமதி மறுப்பு
அதிருப்தி எம்.எல்.ஏக்களை சந்திக்க கர்நாடக அமைச்சருக்கு அனுமதி மறுப்பு
Published on

ராஜினாமா எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள மும்பை ஓட்டலுக்கு செல்ல கர்நாடக அமைச்சருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தம் 224 இடங்கள் உள்ள நிலையில் ஆட்சி அமைக்க 113 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. 37 இடங்களை பெற்றுள்ள மதசார்பற்ற ஜனதா தளமும் 78 எம்எல்ஏக்களை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியும் 115 உறுப்பினர்களின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தன. இதில், 13 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் வழங்கியிருப்பதால், தற்போது ஆளுங்கூட்டணியின் பலம் சபாநாயகருடன் சேர்த்து 103 ஆக குறைந்துள்ளது. பாஜகவின் பலம் 105 ஆக உள்ளது. 2 சுயேட்சைகள் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர்.

ராஜினாமா கடிதம் வழங்கிய எம்.எல்.ஏக்கள் மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளனர். இவர்களை சந்திக்க கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி இன்று மும்பை செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அவரை சந்திக்க விருப்பம் இல்லை எனவும் அதனால் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்நிலையில், ராஜினாமா எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள மும்பை ஓட்டலுக்கு செல்ல கர்நாடக அமைச்சர் சிவக்குமாருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பேசிய அமைச்சர், “கர்நாடக அரசியலில் ஒன்றாக பிறந்த நாங்கள் ஒன்றாகவே அரசியலில் இறப்போம். ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் மீது நாங்கள் அன்புடனே இருக்கிறோம். எந்த மிரட்டலும் இல்லை. நண்பர்கள் உடனான பிரச்னையை பேசி தீர்த்து கொள்வோம். உடனே விவாகரத்து செய்ய முடியாது” எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் சிவக்குமாருக்கு எதிராக ராஜினாமா எம்.எல்.ஏக்களின் ஆதரவாளர்கள் பாஜகவினர் முழக்கமிட்டு வருகின்றனர். கர்நாடகாவுக்கு திரும்பி செல்ல வலியுறுத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com