ஹிஜாப் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது என அம்மாநில கல்வி அமைச்சர் நாகேஷ் கூறியுள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் சட்டம் எல்லாவற்றையும் விட பெரியது என உணர்த்துவதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றம் தருவதாக காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். ஒருபுறம் பெண்ணுரிமை பேசும் நாம் மறுபுறம் அவர்கள் உரிமையை மறுக்கிறோம் என்று ட்விட்டரில் மெகபூபா பதிவிட்டுள்ளார்.
இவ்விவகாரம் மதம் தொடர்பானது மட்டுமல்ல என தெரிவித்துள்ள அவர், விரும்பியதை பின்பற்றக்கூடிய சுதந்திரம் என்ற கோணத்திலும் பார்க்கவேண்டும் என மெகபூபா தெரிவித்துள்ளார்.