கர்நாடகா: பங்குதாரரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு ரியல் எஸ்டேட் அதிபர் எடுத்த விபரீத முடிவு

கர்நாடகாவில் தொழில் தகராறில் பங்குதாரரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tragedy
Tragedypt desk
Published on

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் கே.ஆர்.நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஹோய்சால நகரில் நேற்று காரில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது பட்டப்பகலில் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றதாக தகவல் கிடைத்துள்ளது.

இதில், ஒருவர் காருக்குள்ளேயும் மற்றோருவர் காருக்கு வெளியேயும் உயரிழந்து கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

Police investigate
Police investigatept desk

போலீசார் நடத்திய விசாரணையில், பீகாரை சேர்ந்த சரபாத் அலி (50), ஹாசன் அடுவள்ளி கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரும் பெங்களூரை சேர்ந்தவர் ஆசிப் அலி (46), என்பவரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர்.

Tragedy
கர்நாடகா: சிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர் - துரிதமாக செயல்பட்டு மீட்ட போலீசார்!

கடந்த சில மாதங்களாக தொழில் தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையில் பிரச்னை இருந்து வந்தது. தொழிலில் ஏற்பட்ட தகராறு காரணமாக சரபாத் அலியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற ஆசிப் அலி, தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதன்மூலம் மர்ம நபர்கள் இதில் ஈடுபடவில்லை என தெரியவந்துள்ள நிலையில், போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கி
துப்பாக்கிfile image

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com