தார்வார் விபத்து: 62 மணி நேரத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட இளைஞர்!

தார்வார் விபத்து: 62 மணி நேரத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட இளைஞர்!
தார்வார் விபத்து: 62 மணி நேரத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட இளைஞர்!
Published on

கர்நாடக மாநிலம் தார்வார் நகரில் நடந்த கட்டிட விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர் 62 மணி நேரத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். 

கர்நாடக மாநிலம் தார்வார் நகரில் புதிதாக கட்டப்பட்டு வந்த 5 மாடிகளை கொண்ட வணிக வளாக கட்டிடம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை திடீரென்று இடிந்து விழுந்தது. ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட தரைத்தளம் மற்றும் முதல் மாடியில் கடைகள், கம்ப்யூட்டர் பயிற்சி மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வந்தன.

திடீரென்று கட்டிடம் இடிந்து விழுந்ததால் கட்டுமான தொழிலாளர்கள், கடைகளுக்கு வந்த வாடிக்கையா ளர்கள், பணியாளர்கள், கம்யூட்டர் மையத்துக்கு வந்த மாணவிகள் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். அவர்களில் 60-க்கும் மேற்பட்டோர்களை தீய ணைப்பு படையினர், போலீசார், பொதுமக்கள் உதவியோடு உயிருடன் முதல் நாளில் மீட்டனர். 

இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன ர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை இடிபாடுகளை உடைத்து தீயணைப்பு படையினர் இளைஞர் ஒருவரை உயிருடன் மீட்டனர். அவர் பெயர் சோமு என்று தெரியவந்தது. பின்னர் அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுவரை 64 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 

இந்தக் கட்டிடம் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர், வினய் குல்கர்னியின் உறவினருக்கு சொந்தமானது. கட்டிட பொறியாளர், மகாராஷ்ட்ராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com